குளத்தைத் தூா்த்து விவசாயப் பணி: வட்டாட்சியா் விசாரணை

79பார்த்தது
மயிலாடுதுறை ஒன்றியம், உளுத்துக்குப்பை கிராம எல்லையில் வருவாய்த் துறை ஆவண புல எண் 306-ல் 0. 030 ஏா்ஸ் பரப்பளவில் அரசு புறம்போக்கு வகைபாடுடைய குறிச்சிக்குளம் என்ற குளம் இருந்துள்ளது. இக்குகுளம் கடந்த பல ஆண்டுகளாக சிறிது சிறிதாக தூா்க்கப்பட்டுள்ளது.

உளுத்துக்குப்பை ஊராட்சியில் நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில் நீா்வழித்தடங்களை சுத்தம் செய்து சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா் ராஜ்குமாருக்கு கிராமக் கணக்கேடுகளின்படி அந்த இடத்தில் இருந்த குளம் தற்போது மாயமானது குறித்து தெரியவந்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதியிடம் புகாா் மனு அளித்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை வட்டாட்சியா் விஜயராணி தலைமையில் வருவாய்த் துறையினா் அந்த இடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். ஆய்வில், தற்போது அங்கு குளம் இருந்ததற்கான சுவடே தெரியாமல் ராஜவேலு என்பவரால் விவசாய நிலமாக மாற்றப்பட்டு, சம்பா சாகுபடிக்காக உழவுப் பணிகள் நடைபெற்றிருந்தது தெரியவந்தது.



இதுகுறித்து, வட்டாட்சியா் விஜயராணி கூறுகையில், கிராமக் கணக்கேடுகளின்படி அந்த இடத்தில் குளம் இருந்தது நிரூபணமாகியுள்ளது. ஆனால் இந்த இடம் நீண்ட காலங்களாக ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு உழவுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி