ஒவ்வொரு காய்கறிகளும் தனித்துவமான மருத்துவ ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. அப்படியான ஒரு காய் தான் செள செள எனப்படும் பெங்களூர் கத்திரிக்காய். அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும் கொண்ட செள செள உடலில் செல் பிரிவை சரியான முறையில் ஊக்குவிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் அதிகப்படியான திரவத்தையும் உப்பையும் அகற்ற உதவும் டையூரிடிக் பண்புகளை இவை வெளிப்படுத்துகின்றன. இதய நோய் அபாயத்தை செள செள குறைக்கும்.