வேதாரண்யத்தில் ஆவின் பாலகம் விற்பனையகம் திறப்பு விழா நடைபெற்றது. நாகை மாவட்டம் வேதாரண்யம் வடக்கு வீதியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் புதிய ஆவின் பாலக விற்பனையகத்தை சரக துணை பதிவாளர் ராமசுப்பு முன்னிலையில் வேதாரண்யம் நகர் மன்ற தலைவர் மா. மீ. புகழேந்தி திறந்து வைத்தார். இந்த ஆவின் பாலகத்தில் பால், தயிர், மோர், நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும். இத்திறப்பு விழாவில் வேதாரண்யம் வட்டார கூட்டுறவு சார்பதிவாளர் முத்துராஜா, சங்க பொது மேலாளர் கிருபாகரன் உள்ளிட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.