நாகூர் அருகே மேய்ச்சலுக்கு சென்றிருந்த ஆட்டினை திருடியவர் கைது.
நாகை மாவட்டம் நாகூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் பக்கிரி சாமி மகன் செந்தில் வயது 38. கடந்த 18ஆம் தேதி காலை 7: 30 மணிக்கு செந்தில் தனது ஆட்டினை நாகூர் நகராட்சி ஆட்டு தொட்டி அருகே மேச்சலுக்கு விட்டு விட்டு சென்றுள்ளார். மாலை வந்து பார்த்தபோது மேய்ச்சல்க்கு சென்றிருந்த ஒரு ஆடு காணாமல் போயிருந்தது இது தொடர்பாக செந்தில் நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் நாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் செந்தில் ஆட்டினை திருடியது நாகூர் பீரோடும் தெரு பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் கஸ்தூரி ரங்கன் வயது 55 என்பது தெரிய வந்தது இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கஸ்தூரி ரங்கன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.