கரும்புகையால் பொதுமக்கள் அவதி

59பார்த்தது
நாகப்பட்டினம் நகர பகுதியான கோட்டைவாசல் பகுதியில் நகராட்சி வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், ராட்சத குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தீயிட்டு கொளுத்தப்படுகிறது. இந்த குப்பைகள் தீயிட்டு கொளுத்தப்படுவதால் அதிக அளவில் கரும்புகைகள் அருகில் உள்ள நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா மற்றும் பிரதான சாலைகளில் சூழ்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமலும், பூங்காவில் சிறுவர்கள் விளையாட முடியாமலும், பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி