செய்தி: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 566, அரசு பள்ளிகளில் பயிலும் 86, 762 மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2024 2025 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விலையில்லா சீருடை வழங்கும் விழா நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள 566 பள்ளிகளுக்கும் 86 762 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளை வழங்கி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி நாகை நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.