ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகள் இந்திய இலங்கை எல்லைக்கு அருகில் உள்ளது. இங்கிருந்து குறைவான நேரத்தில் இலங்கையை சென்றடைய முடியும். இதனால் இந்த பகுதியில் இருந்து போதைப் பொருட்கள் இலங்கைக்கு எளிதாக கடத்தப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக இளைஞர்களிடமிருந்து மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் மெத்தபெட்டமைன் கடத்தல், விற்பனை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.