ஒடிசாவில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் லிட்டன் மஜீம்தார் தலைமையிலான குழு பூமியில் இருந்து 489 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய சூரிய குடும்பம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனை GG Tau A என்ற பெயரில் அழைக்கிறார்கள். இந்த சூரிய குடும்பம், பூமி இடம்பெற்றுள்ள சூரிய குடும்பத்தை விட சற்று மாற்றமாக காணப்படுகிறது. இந்த சூரிய குடும்பத்தில் மூன்று நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.