ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் 9. வது பட்டமளிப்பு விழா

69பார்த்தது
நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் 9. வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் இந்த பட்டமளிப்பு விழாவில் 332 நபர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பெலிக்ஸ் பல்கலைக்கழகத்தின் சாதனைகள் குறித்தும் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் - தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் இன்று பல்வேறு இடங்களில் மீன்வளத்துறையில் பணியில் உள்ளார்கள் இதுபோல அரசு சார்ந்த துறைகளில் பல்வேறு திட்ட மதிப்பீடு அளித்து அந்த நோக்கத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது வருகிறது இதுபோல ஆஸ்திரேலியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் மீன்வளத்துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்கள் குறிப்பாக சூரிய சக்தி கொண்டு படகுகளை இயக்கு முறைகள் குறித்து தற்போது ஆய்வு கட்டுரைகள் பல சமர்ப்பித்துள்ளார்கள் இந்திய அளவில் பல்வேறு மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்கள் மீன்வளப் பல்கலைக்கழகம் மாணவர்களின் அளப்பரிய பங்கு மீன்வளத்தினை பெறுவதிலும் மீன் உற்பத்தி பொருட்களை நவீன முறையில் சந்தைப்படுத்துவதிலும் அதிக அளவில் உள்ளது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி