மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொறையார், காத்தான் சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டு வருகிறது.
பாலித்தீன் பயன்பாட்டை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டு அதன் பயன்பாடு குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்ற பொது மக்களுக்கு மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.