மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்து சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு கூட அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை திடீரென கரு மேகங்கள் சூழப்பட்டு இரண்டு காணப்பட்டது. அதன் பின்னர் திடீரென கன மழை பெய்ய தொடங்கியது.
இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.