இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்கு சென்று விடுவதால் கிராமப்புறங்களில் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. விதை விதைத்தல், நாற்றங்கால் தயார் செய்தல், நிலத்தை சமன்படுத்துதல், அண்டை வெட்டுதல், நடவு செய்தல், களையெடுப்பது, உரமிடுவது, பூச்சிக்கொல்லி தெளிப்பது, அறுவடை செய்வது என்று ஆட்களால் செய்யப்பட்ட அனைத்து வேலைகளும் தற்போது ஆள் பற்றாக்குறை காரணமாக விவசாயத் தொழிலை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதனைத் தவிர்க்க விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளுக்கும் இயந்திரங்கள் வர துவங்கியுள்ளன. இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேளாண் பொறியியல் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் குறித்த கண்காட்சி முகாம் மற்றும் செயல் விளக்கம் இன்று நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிப்பது, நடவு இயந்திரம், உள்ளிட்ட அனைத்து வகையான இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஏராளமான விவசாயிகள் பங்கேற்று விளக்கம் கேட்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஆர் சுதா சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நேற்று(செப்.2) பங்கேற்றனர்.