காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

55பார்த்தது
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் மத்திய அரசு அலுவலகமான தலைமை அஞ்சலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: -

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், உத்தரபிரதேசம், பிஹார், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசுக்கு அதிக அளவில் வரி செலுத்தும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். இதில், மாநில பொதுச்செயலாளர் கனிவண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரத்சந்திரன், நவாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு, மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி