கும்பகோணம் - Kumbakonam

கும்பகோணம்: பள்ளி அருகே கழிவுநீா் தேக்கம்.. தொற்று நோய் பரவும் அபாயம்

கும்பகோணம்: பள்ளி அருகே கழிவுநீா் தேக்கம்.. தொற்று நோய் பரவும் அபாயம்

கும்பகோணம் மாநகராட்சி கவரை தெருவில் அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 700 மாணவர், மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவரை சுற்றி சாக்கடை கால்வாயில் தண்ணீர் நிரம்பி உள்ளது. சுவரை ஒட்டியும் சாக்கடைத் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  பள்ளி வகுப்பு நேரங்களில் துர்நாற்றத்தை சுவாசித்துக் கொண்டுதான் மாணவர், மாணவிகள் படித்து வருகின்றனர். பிற்பகலுக்கு மேல் கொசுக்கள் வருப்பறைக்குள் வந்து மாணவர், மாணவியர்கள், ஆசிரியர், ஆசிரியர்களை கடித்து வருகிறது. இதனால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது என பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக மாநகராட்சியினர் மற்றும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా