பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை என்பது அடிப்படையான தேவை உள்ளிட்ட பெண்களின் பல்வேறு உரிமைகளுக்காக கர்ஜித்த ஈ.வெ.ராமசாமி என்ற இயற்பெயர் கொண்டவருக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்டது இதே தினத்தில் தான். கடந்த 1938 நவம்பர் மாதம் 13 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அவருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மாநாட்டில் தருமாம்பாள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் போன்றவர்கள் பங்கேற்றனர்.