நாகப்பட்டினம் மாவட்டம் தெற்கு பொய்கைநல்லூரில் கடந்த பதினெட்டாம் தேதி வீட்டில் விளங்கிக் கொண்டிருந்த தாய், மகளுக்கு காரைக்கால் சேர்ந்த முத்துக்குமார் பாலியல் தொல்லை கொடுத்து கைதாகி உள்ளார். இந்நிலையில் இன்று காலை விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தை சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.