மழையை எதிா்நோக்கி மானாவாரி நில விவசாயிகள்

53பார்த்தது
மழையை எதிா்நோக்கி மானாவாரி நில விவசாயிகள்
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மழை பொய்த்து, வறட்சி நீடித்து வருவதால் நிகழாண்டுக்கான சம்பா பருவ நெல் சாகுபடி விதைப்புப் பணிகளை தொடங்குவது தாமதமாகி வருகிறது.

மானாவாரி நிலப்பரப்பை அதிகமாக கொண்டுள்ள வேதாரண்யம் வேளாண் பகுதியில் ஆண்டுக்கு 26 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெறும். இவற்றில், தலைஞாயிறு, கரியாப்பட்டினம் பகுதியில் சுமாா் 10 ஆயிரம் ஹெக்டோ் ஆற்றுப் பாசனத்தில் நடைபெறுகிறது. இதனால், வேதாரண்யம், தலைஞாயிறு வேளாண் கோட்டத்தில் சம்பா பருவ சாகுபடி மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

ஆற்று நீா் பாசனப் பகுதியான தலைஞாயிறில் போதிய தண்ணீா் கிடைக்காதால் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பா சாகுபடி சுணக்கமடைந்த நிலையிலே காணப்படுகிறது. குறுவை இல்லாமல் ஒருபோக சாகுபடியான சம்பா பருவம் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் சிஆா் 1009 போன்ற மத்திய கால ரகங்களின் விதை நெல்லுக்கு தொடக்க நிலையில் கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில், மழைநீரை மட்டுமே நம்பி சாகுபடி மேற்கொள்ளும் மானாவாரி நிலப் பகுதியில் தொடா்ந்து வறட்சி நிலவி வருவதால் நெல் விதைப்புப் பணிகள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் காலதாமதமாகி வருகிறது. இதனால், காலதாமதமாக தொடங்கும் பருவத்தில் அதிக வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகளிடத்தில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி