பெங்களூருவில் மாற்று திறனாளிக்கான 13 வது தேசிய ஜூனியர் பாரா தடகளப் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. தமிழக அணியில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை பகுதியை சேர்ந்த எஸ் வீரசெல்வம் குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்ற சாதனை படைத்தார். இந்நிலையில் போட்டியில் வென்ற சாதனை படைத்த வீரர் எஸ் வீர செல்வத்தை நாகப்பட்டினம் ஆட்சியர் ஆகாஷ் நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.