மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

66பார்த்தது
மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வெள்ளப்பள்ளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் சுமார் 9176 மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 8 விசைப்படகுகள், 490 நாரிழைப் படகுகள் மற்றும் 80 கட்டுமரங்கள் மூலம் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். இங்கு படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்களை இறக்கி சுகாதரமான முறையில் சந்தை படுத்துவதற்கும், வலைகளை உலர்த்துவதற்கும், பின்னுவதற்கும் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. மேற்கண்ட மீனவ மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விரிவான திட்ட அறிக்கை ரூ. 100 கோடிக்கு தயாரிக்கப்பட்டது. அலை தடுப்புச் சுவர் படகு அனையும் சுவர், தூர்வாரும் பணி, சாய்வு தளம், மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், அலுவலக கட்டிடம் மற்றும் சுகாதார மையம், பாதுகாவலர் அறை, பொது கழிவறை, மீனவர் ஓய்வு அறை, படகு பழுதுபார்க்கும் அறை, மேல்நிலை நீர்தேக்க தொட்டி , வாகனம் நிறுத்துமிடம், நுழைவாயில் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி