சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

3379பார்த்தது
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் 13 லட்சத்து 50 ஆயிரம் ஏமாற்றிய நபர் கைது செய்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த குமரேசன் என்பவரது மகன் சுதாகர் (வயது 30). இவரிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி நாமக்கலை சேர்ந்த தஸ்தகீர் (31) என்பவர் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் வாங்கியுள்ளார். அதேபோல சுதாகர் உட்பட அவரது நண்பர்கள் 10 பேரிடமும் சேர்த்து ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் தான் கூறியபடி சிங்கப்பூரில் வேலை வாங்கி தராமல் தஸ்தகீர் இழுத்தடித்து வந்துள்ளார். அப்போது கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுதாகர் நாகப்பட்டினம் மாவட்ட குற்ற பிரிவுவில் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 10 பேரிடம் ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக தஸ்தகீரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி