தேவூர் தேவ துர்க்கை அம்மன் ஆலய நவராத்திரி திருவிழா

71பார்த்தது
தேவூர் தேவ துர்க்கை அம்மன் ஆலய நவராத்திரி திருவிழா பூச்சொரிதலுடன் துவங்கியது: நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தட்டு ஏந்தி வந்து பூக்களால் அபிஷேகம்



நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவதுர்க்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழா பூச்சொரிதலுடன் இன்று வெகு விமர்சையாக துவங்கியது. தேவூர் தேவபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளை சுமந்து வந்து முக்கிய வீதிகள் வழியாக தேவதுர்க்கை அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா சண்டியாகம் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறுகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி