தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ள யோகி பாபு இன்று (பிப். 16) அதிகாலை ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியான நிலையில் விபத்தில் காயம் எதுவும் ஏற்படாமல் யோகி பாபு தப்பியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் நலமுடன் இருப்பதாக யோகி பாபு எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததோடு, அது பொய்யான தகவல் என்றும் கூறினார்.