நடிகர் சத்யராஜின் மகளுக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவுக்கு, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச்செயலாளராக திவ்யா சத்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளதால், நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கி பணியாற்ற கட்சி தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.