டெல்லி ரயில் நிலையத்தில், விடுமுறையை முன்னிட்டு கும்பமேளாவிற்கு செல்ல பக்தர்களால் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலத்தைப் பார்த்து, குடும்பத்தினர் கதறி அழும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பயணிகளின் செருப்புகள் மற்றும் உடமைகள் சிதறிக்கிடந்தன. கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில்வே துறை தவறிவிட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.