உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மஹா கும்பமேளாவிற்கு சென்றுவிட்டு திரும்பிய பேருந்து தீப்பிடித்து எரிந்தது. ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்லீப்பர் கோச் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் நடந்த விபத்தில் 51 பயணிகள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பேருந்தில் இருந்து குதித்து தப்பினர். நாகௌரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார். 3 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.