நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து தொடக்கம்

59பார்த்தது
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து தொடக்கம்
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இன்று முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் பயணம் இன்று காலை 10 மணிக்கு நாகையில் இருந்து புறப்படுகிறது. தொடர்ந்து அந்த கப்பல் மதியம் 2 மணிக்கு இலங்கையை சென்றடையும். இந்த கப்பலில் பயணிக்க சாதாரண இருக்கைக்கு 5ஆயிரம் ரூபாய் எனவும் பிரீமியம் வகுப்பு இருக்கையில் பயணிக்க 7ஆயிரத்து 500 ரூபாய் என பயண டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி