என் அரசியல் குரல் ஒலிக்கும்! இயக்குநர் தங்கர்பச்சான் உறுதி

51பார்த்தது
என் அரசியல் குரல் ஒலிக்கும்! இயக்குநர் தங்கர்பச்சான் உறுதி
மக்களவை தேர்தலில் கடலூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து அவரின் எக்ஸ் தள பதிவில், “வணக்கம் எழுத்துக்கள், பேச்சுக்கள், திரைப்படங்கள் மூலமாக மக்களுக்கான அரசியலை பேசிக் கொண்டிருந்த எனக்கு தேர்தல் கள அரசியலில் செயலாற்றுவற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்த சமூக நீதிப் போராளி மருத்துவர் திரு இராமதாஸ் அவர்களுக்கும், திரு அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கும் நன்றிகள்...

அதேபோல் கடலூர் நாடாளுமன்றம் தொகுதியில் பதிவான வாக்குகளில் 20% வாக்குகளான 205244 வாக்குகளை என் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கும்,அதற்கு உறுதுணையாக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும், அனைத்து தோழமைக் கட்சிகளுக்கும் பெரு நன்றியினை உரித்தாக்குகிறேன். என்னை வளர்த்தெடுத்த இம்மக்களுக்காக தொடர்ந்து என் அரசியல் குரலும், செயல்பாடுகளும், படைப்புகளும் இருந்து கொண்டே இருக்கும். நன்றிகள்!!" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி