ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: கேசவ விநாயகம் ஆஜர்

74பார்த்தது
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: கேசவ விநாயகம் ஆஜர்
தாம்பரம் ரயில்நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆஜரானார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆஜராவதாக தெரிவித்த நிலையில், கேசவ விநாயகம் இன்று(ஜூன் 5) நேரில் ஆஜராகினார். 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்பட 5 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. மேலும், இவ்வழக்கில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி