மக்களவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆந்திராவில் 16 தொகுதிகளை பிடித்த சந்திரபாபு நாயுடு தற்போது கிங்மேக்கராக மாறியிருக்கிறார். மேலும் பாஜக கூட்டணியில் தொடர்வதாக அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அவருடன் கூட்டணியில் இருக்கும் பவன் கல்யாணின் ஜனாசேனா கட்சியின் நிலைமை குறித்து தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அணி மாறுவீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனது விசுவாசமும் அர்ப்பணிப்பும் மோடிக்கு தான். அணி மாறும் எண்ணமே என்னுள் எழாது” என கூறினார்.