ஆந்திர உயர் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த உச்ச நீதிமன்றம்

73பார்த்தது
ஆந்திர உயர் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த உச்ச நீதிமன்றம்
வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த எம்.எல்.ஏ.வை கைது செய்ய ஆந்திர உயர் நீதிமன்றம் தடை விதித்தது கேலிக்கூத்து என உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் போது YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ண ரெட்டி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் அவரை கைது செய்ய ஆந்திர உயர் நீதிமன்ற தனி நீதிபதி இடைக்கால தடை விதித்தார். இதற்கு எதிரான மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவை கேலிக்கூத்து என விமர்சித்துள்ளது. வரும் 6ம் தேதி இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி