“நேருவுக்கு பிறகு மோடி தான்” - வானதி ஸ்ரீனிவாசன் பெருமிதம்

68பார்த்தது
“நேருவுக்கு பிறகு மோடி தான்” - வானதி ஸ்ரீனிவாசன் பெருமிதம்
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் மோடியை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அதில், “சுதந்திர இந்தியாவின் 77 ஆண்டுகளில் நாட்டின் முதல் பிரதமர் நேருவால் மட்டுமே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முடிந்தது. அரசியலில் 17 ஆண்டுகள் பெரும் செல்வாக்குடன் வலம் வந்த இந்திரா காந்தியால் கூட இதை செய்ய முடியவில்லை. 1977 இல் இந்திராகாந்தியே தோல்வியை தழுவினார். ஆனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைத்திருப்பது பெரும் சாதனை” என பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி