பிஸியான நடிகையாக மாறிய மிருணாள்!

81பார்த்தது
பிஸியான நடிகையாக மாறிய மிருணாள்!
'சீதா ராமம்' படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைந்தவர் நடிகை மிருணாள் தாக்கூர். இந்த படத்தின் வெற்றி இவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றுவிட்டது. சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் பல பரிமாணங்களை காட்டி ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார். இவரின் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'ஹாய் நன்னா' படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர் வெற்றிகள் காரணமாக தெலுங்கு மற்றும் தமிழில் அதிக படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ள மிருணாள் தாக்கூர், அரை டசன் படங்களை கையில் வைத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்தி