மகனை மிரட்ட தீ வைத்துக் கொண்ட தாய் பலி

66பார்த்தது
மகனை மிரட்ட தீ வைத்துக் கொண்ட தாய் பலி
மதுரை மாவட்டம் கப்பலூரை சேர்ந்த மாயாண்டி மனைவி செல்வி (45). இவர்களது மகன் சுபாஷ் (19) வீட்டில் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதை தாய் செல்வி பலமுறை கண்டித்தும் கேட்காததால் நேற்று முன்தினம் வீட்டில் அவர் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பது போல் நடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக செல்வி உடலில் தீ பிடித்தது. தீயை அணைத்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு செல்வி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி