வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். சென்னை திருவெற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு நேற்று (அக்., 25) 39 மாணவிகள் பாதிக்கப்பட்டனர். அரசு பொது மருத்துவமனையில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தனியார் மருத்துவமனையில் 3 பேரும், அரசு மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களும் இன்று வீடு திரும்பவுள்ளனர்.