மோகன் நடராஜன் எனக்கு ஒரு தந்தையைப் போல் இருந்தார்

66பார்த்தது
மோகன் நடராஜன் எனக்கு ஒரு தந்தையைப் போல் இருந்தார்
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் நடராஜன் உயிரிழந்த நிலையில் அஜித் நடித்த ’ஆழ்வார்’ திரைப்படத்தை இயக்கிய ஷெல்லா அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்தார். “மோகன் சார் மறைவு செய்தியை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அவரை ஒரு தயாரிப்பாளர் என சொல்வதை விட என் தந்தை என சொல்லலாம். ஆழ்வார் படப்பிடிப்புக்கு வந்தார் என்றால் ஒரு தயாரிப்பாளராக இருக்க மாட்டார். என்னை அவரின் மகன் மாதிரி கவனித்துக் கொண்டார். அதை மறக்கவே முடியாது.” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி