பொய் செய்தி பரப்புவதில் மோடி சாதனை: அமைச்சர் விமர்சனம்

77பார்த்தது
பொய் செய்தி பரப்புவதில் மோடி சாதனை: அமைச்சர் விமர்சனம்
பொய் செய்திகளை பரப்புவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த சாதனையை உருவாக்கியவர் பிரதமர் மோடி என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், 15% நாட்டின் வளத்தை முஸ்லிம்களுக்கு கொடுக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் காவலன் இந்த மோடி. அந்த மக்களின் உரிமைகளை பறிக்க விடமாட்டேன். இந்து - முஸ்லிம் என நான் அரசியல் செய்வதில்லை. அப்படி அரசியல் செய்தால், நான் பொதுவாழ்வில் இருக்கவே தகுதியில்லாதவன். காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் அயோத்தி ராமர் ஆலயம் இல்லாமல் போய்விடும். ராமர் மீண்டும் கூடாரத்திற்கு சென்றுவிடுவார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்குள் புல்டோசர் செல்லும். ஓட்டுக்காக இத்தனை பொய்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி