காணாமல் போன குளம்.. பொதுமக்கள் புகார்!

54பார்த்தது
காணாமல் போன குளம்.. பொதுமக்கள் புகார்!
வடிவேலு, கிணத்த காணோம் என போலீசில் புகார் அளிப்பதை போல, பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில்
ஒரு கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தங்க ஊரில் இருந்த குளத்தை காணோம் என புகார் அளித்துள்ளனர். முன்னதாக அதே ஊரை சேர்ந்த சில விஷமிகள் அந்த குளத்தில் மண்ணைப்போட்டு நிரப்ப முயன்ற நிலையில், அது தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக அந்த குளத்தை மண்ணை போட்டு மூடி அதன் மேல் ஒரு குடிசை கட்டப்பட்டு இருந்ததை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் போலீசாரை கண்டு பயந்து ஓடிய அந்த நபர்களை தேடிவருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி