நிலைதடுமாறி கீழே விழப்போன அமைச்சர்.. வீடியோ

62பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அமைச்சர் பொன்முடி கால் தடுமாறி கீழே விழப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னசெவளை கிராமத்தில் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அங்கு வந்திருந்த அமைச்சர் பொன்முடி மேடையில் ஏறி பேசிவிட்டு கீழே இறங்கினார். பின்னர் அங்கிருந்த காரை நோக்கி நடந்து வந்த அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழப்போனார். இதனைக்கண்ட அமைச்சரின் உதவியாளர் அவரை தாங்கிப்பிடித்து கீழே விழுக்காமால் காப்பாற்றினார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி