அமைச்சர் உதயநிதி இன்றும், நாளையும் பிரச்சாரம்

1898பார்த்தது
அமைச்சர் உதயநிதி இன்றும், நாளையும் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். குமலன்குட்டை, கணபதிநகர், நாராயணவலசு, இடையன்காட்டுவலசு, பழனிமலை வீதி, கமலா நகர், பம்பிங் ஸ்டேசன் ரோடு, வீரப்பன்சத்திரம் பகுதிகள் இன்று மாலை பிரச்சாரம் செய்யவுள்ளார். நாளை மாலை எஸ்.கே.சி.ரோடு, கிராமடை, மணல்மேடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்யவுள்ளார். முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக மநீம தலைவர் கமல்ஹாசன் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.