தவெக விஜய்யை தாக்கி பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்

67பார்த்தது
சென்னை மாங்காட்டில் இன்று (செப்.4) நடந்த திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ''நடிகர்கள் ஒரு படத்திற்கு ரூ.200ச்கோடி வாங்குறாங்க. உங்களுடைய ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் கொடுக்க வேண்டியது தான. ஒரு டிக்கெட் ரூ.2000க்கு கொடுக்கிறார்கள். இவர்களால் நாட்டை பாதுகாக்க முடியுமா?. மாணவர்களுக்கு பரிசு கொடுத்தார்கள். கட்சி ஆரம்பிக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் அதை செய்கிறார்கள்'' என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்

தொடர்புடைய செய்தி