அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். எதிர்காலத்தில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி அமைச்சர் பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்மண் முறைகேடு அடிப்படையில் அமலாக்க துறை தாக்கல் செய்த வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில், அமைச்சர் பொன்முடி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.