புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு, ரூ.13,600 கோடிக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி அண்மையில் தாக்கல் செய்தார். அப்போது, மஞ்சள் நிற ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், பெண்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.