கோவை: நஞ்சுண்டாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் ஒற்றை யானை அண்மை நாட்களாக உலா வருவது பொதுமக்களை பீதியடைய செய்திருக்கிறது. இதையடுத்து வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே நள்ளிரவில் யானை தெரு தெருவாக வேகமாக நடந்து செல்வதும், அதை பார்த்து நாய்கள் குரைப்பதையும் சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.