சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார் போக்சோவில் கைது

1570பார்த்தது
சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார் போக்சோவில் கைது
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொக்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு (27). கொத்தனாரான இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். தற்பொழுது அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கர்ப்பத்தை கலைத்து விட்டு ராஜு தலைமறைவானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த ராஜு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தேடிவந்தனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி