HMPV வைரஸ் எதிரொலியாக உதகையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருவதால், மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.