உடல்வாகு மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் வெண்ணெய் சாப்பிடலாம். நட்ஸ் வெண்ணெயில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. இவற்றை உட்கொள்வதால் உடலில் உள்ள கலோரிகள் அதிகரித்து எடை வேகமாக கூடும். வாழைப்பழம், சப்போட்டா, பப்பாளி, சீத்தாப்பழம், கொய்யா மற்றும் அத்திப்பழம் ஆகியவற்றை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். பழங்களின் மில்க் ஷேக் குடிப்பதும் கூடுதல் பலன் தரும்.