வீட்டில் இருக்கும் சில புகைப்படங்கள் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதிலும், ஈர்ப்பதிலும் பங்கு வகிக்கின்றன. முள் செடிகள் அல்லது புகைப்படம் வைப்பது கூடாது. இது துர்சக்திகளை வீட்டை நோக்கி ஈர்க்கும். சிவனின் ருத்ரதாண்டவம் அழிவுடன் தொடர்புடையது. எனவே அது போன்ற புகைப்படம் வைத்தல் கூடாது. மூழ்குகிற கப்பல் புகைப்படம் ஒருவரின் மன உறுதியைக் குலைக்கும். போர் காட்சிகள், சண்டை, வன்முறை, வேட்டை போன்றவற்றையும், கல்லறை, மயானம் போன்ற புகைப்படங்களையும் வைத்தல் கூடாது.