சீனா: ஆண் மற்றும் பெண் என 2 பாலின பிறப்பு உறுப்புகளையும் கொண்ட லியூ (59) என்ற பெண் குறித்த செய்தி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லியூவிற்கு 18 வயதில் திருமணமாகி முதல் குழந்தைக்கு தாயான பின் தாடி, மீசை என உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் பின் ஆணாகவே வாழத்தொடங்கிய லியூ, சோஹூ என்ற பெண்ணை மணம்முடித்து மீண்டுமொரு ஆண் குழந்தைக்கு தந்தையானார். அதிகளவிலான ANDROGENIC ஹார்மோன்களே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.