புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், 30-வது சர்வதேச யோகா திருவிழா புதுச்சேரி கடற்கரை சாலை பழைய துறைமுக வளாகத்தில் நடந்து வருகிறது. விழாவையொட்டி நடந்த யோகா போட்டிகளில் புதுச்சேரி, ஆந்திரா, டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து 208 பேர் கலந்துகொண்டனர். இதில் மூத்த யோகா கலைஞர் ஒருவர் தனது மூக்கு வழியாக கயிறை விட்டு வாய் வழியாக எடுத்து செய்த மூச்சுப்பயிற்சி யோகா அனைவரையும் கவர்ந்தது.