பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார்
என்ற யுஜிசியின் புதிய விதிகளின் வரைவு அறிக்கைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், ஆளுநர்களுக்கு பரந்த கட்டுப்பாட்டை வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது ஆகியவை கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் முயல்கிறது என கூறியுள்ளார்.